சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று நடக்க இருக்கும் ஹைதராபாத்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சூப்பர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 193 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இன்று இரவு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி 194 ஆவது முறையாக விளையாட இருப்பதால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்க போகிறார்.
தற்போது தனது சொந்த பிரச்சினையினால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலையில் இருப்பதால் அவரால் தனது சாதனையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரோகித் சர்மாவும் இதுவரை 192 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எனவே வெகுவிரைவில் அவரும் சாதனையை முறியடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ் ஹைதராபாத் அணியுடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.