நாமக்கல்லில் இன்று (மே-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆறு நாட்களாக 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 45 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 பைசாவாக அதிகரித்துள்ளது.
Categories