Categories
ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 16.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

 

 16.04.2020,சித்திரை 3,வியாழக்கிழமை,

இராகு காலம் – மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன்- காலை 09.00-10.30.

இன்றைய ராசிப்பலன் –   16-04-2020

மேஷம்

இன்று உங்கள் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் உடன் வேலை செய்பவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு புதியதாக வண்டிகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களுக்கு இன்று வீண் செலவுகள் ஏற்படலாம். உங்கள் குடும்பத்தினரின் மூலம் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில தடங்கல்கள் ஏற்படும்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்தோஷமும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையுடன் செல்வது நல்லது.

கடகம்

இன்று உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.எடுக்கும் அனைத்து காரியங்களில் முழு வெற்றி கிடைக்கும்.வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் நேரும். திடீர் பணவரவு உண்டாகலாம். கடன் பிரச்சினை நீங்கும்.தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும்.

சிம்மம்

உங்களுக்கு இன்று பொருளாதாரம் மிக சிறப்பாக அமையும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்திலிருந்த இருந்த சிறு பிரச்சனைகள் தீரும். புதிதாக சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலைகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் மனநிம்மதி குறைய வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும்.வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாம்

உங்களுக்கு இன்று பண வரவு எதிர்பார்த்த அளவு கிடைக்காது.விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் லாபம் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும்.உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய நண்பர்களால் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
பிள்ளைகளால் நற்செய்திகள் வந்து சேரும்.தொழிலில் எதிர்பாராத வகையில் செலவுகளை ஏற்பட்டு கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலன்களை உண்டதாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. புதிய தொழில் தொடங்குவதில் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

இன்று சில உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமணம் தொடர்பான பலன்கள் சாதகமாக அமையும். படிப்பில் பிள்ளைகளின் நிலை முன்னேற்றமடையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

Categories

Tech |