Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய( 17.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

17.04.2020,சித்திரை 4,வெள்ளிக்கிழமை.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30

குளிகன் காலை 07.30 -09.00.

இன்றைய  ராசிப்பலன் –  17.04.2020

மேஷம்

     இன்றுநீங்கள்அனைத்துசெயல்களிலும்மனஉறுதியோடுசெயல்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பிள்ளைகளால் நற்செய்தி வந்து சேரும். சுப நிகழ்ச்சிகள் தொடங்க நல்ல நாள். பொண் பொருட்கள் சேரும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் இன்று எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.புதிய முயற்சிகளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆலோசனைகள் நற்பலனை தரும்.

மிதுனம்

இன்று எதிர்பாராத வகையில் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை தொடர்பான வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அனைத்து செயல்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவு தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

கடகம்

இன்று உங்களுக்கு மனக்கஷ்டங்கள் உண்டான நேரிடலாம். உங்கள் செயல்களில்  மந்தமான நிலை ஏற்படும். உங்களுக்கு இன்ற சந்த்ராஷ்டமம்  நாளாக இருப்பதால் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

உங்களுக்கு இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.சகோதர,சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத நற்செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.வியாபாரத்தில்  திருப்திகரமான லாபம் கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி

இன்று உங்களுக்குப் பொருளாதாரத்தில் நிலை சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் மனதிற்குப் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளினால்  அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாகும். மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் நன்மைகள் உண்டு. உறவினர்களால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றலாம். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

தனுசு

உங்களுக்கு இன்று தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற நற்பலன்கள் கிடைக்கும்.

மகரம்

உங்களுக்கு இன்று பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகலாம்.பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலபயன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். தொழிலில் ஒரு சில மாற்றங்கள் செல்வதால் லாபத்தை அடைய முடியும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம்

உங்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிதாக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலிலிருந்து சிறுசிறு பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். இதுவரை இருந்து வந்த போட்டி,பொறாமைகள் குறையும்.

மீனம்

உறவினர்களால் உங்களுக்கு இன்று வீண் செலவுகள் உண்டாகலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

 

Categories

Tech |