நாமக்கல்லில் இன்று (ஜூன்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகளாக விற்பனையானது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக 20 காசுகள் குறைந்து ரூ.5 க்கு விற்பனையானது. இதனைத்தொடர்ந்து இன்று 15 காசுகள் குறைந்து 4 ரூபாய் 85 காசுகளாக விறபனையாகிறது.