25-01-2020, தை 11, சனிக்கிழமை, கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம் :
இன்று உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். வீட்டில் பெண்கள் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் போன்றவை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் கூடும். கடன்கள் தீரும்.
ரிஷபம் :
இன்று உங்கள் இல்லத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு நல்லபடியாக இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். தேவைகள் நிவர்த்தியாகும். பயணங்களால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம் :
இன்று குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலைப்பதால் சுபகாரிய முயற்சிகளில் இடையூறு உண்டாகும். பெரிய தொகையை அடுத்தவரை நம்பி கடன் கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்லவும்.
கடகம் :
இன்று குடும்பத்தில் திடீர் என தனவரவு பெருகும். உடன்பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் நிச்சயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் நல்லது நடக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.
சிம்மம் :
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு தேடி வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை இன்று அதிகரிக்கும். தொழிலில் எடுக்கும் அனைத்தும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் இருந்த தொல்லைகள் விலகும்.
கன்னி :
இன்று வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனகசப்பு உண்டாகும் . குடும்பத்தில் தேவை இல்லாத கருத்து வேற்றுமை தோன்றும். எந்த காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நண்பர்களின் உதவி கிடைக்கும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
துலாம் :
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முயற்சியில் அதிக கவனமுடன் இருப்பது அவசியம். வெளியூர் பயணங்களால் செலவு ஏற்படலாம். பெரிய அதிகாரிகளின் ஆதரவுடன் உத்தியோகம் ரீதியான பிரச்சினைகள் முவதையும்.
விருச்சிகம் :
இன்று பொருளாதார நிலை அம்சமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை தீரும்,.
தனுசு :
இன்று திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியவர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கு உணவில் கட்டுப்பாடு அவசியம். எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் லாபம் உண்டாகும்.
மகரம் :
இன்று வீட்டில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
கும்பம் :
இன்று பிள்ளைகளினால் மனக்கஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழல் உண்டாகும். உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்க தாமதமாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வியாபாரத்தில் உள்ள வேலையாட்கள் பொறுப்பு உணர்ந்து நடந்துகொள்வார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மீனம் :
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தைரியத்தோடு செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு தகுந்த ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதற்கு சரியான நாளாகும்.