மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் மயூர். இவர் பேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பிழை ஒன்று இருப்பதாகவும் ,அதை யாரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதிப்பதாகவும் கண்டுபிடித்துள்ளார். அந்த பிழையை கண்டுபிடித்து அதோடு மட்டுமல்லாமல் அதை சுட்டிக்காட்டி பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவருக்கு பிழையை சுட்டிக் காட்டியதற்காக ரூபாய் 22 லட்சம் பரிசு வழங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தங்களிடம் இதுபோன்ற அறிக்கைகளை எதிர்பார்க்கிறோம் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.