இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இடம் பிடித்துள்ளனர்.
உலகில் உள்ள அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12 வது இடத்தையும், அவரது மனைவி மற்றும் நடிகையுமான அனுஷ்கா சர்மா 25 ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். சமீபத்தில் அனுஷ்கா சர்மா கற்பகாலத்தில் சிராசனம் மேற்கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.