Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் திடீர் கோளாறு!… பயனர்களுக்கு குறைந்த பாலோவர்ஸ்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலியில் திடீரென நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டு பயனர்களுக்கு அதிருப்தி அளித்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று உலகெங்கிலும் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் சேவையில் சிலமணி நேரங்கள் சிக்கல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டு வாட்ஸ் அப் இயல்புநிலைக்கு திரும்பியது. இந்த நிலையில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமிலும் இதுபோல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் உலகெங்கிலும் இருந்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பல பேர் இன்ஸ்டாகிராம் கோளாறு தொடர்பாக புகாரளித்து இருக்கின்றனர்.

சில மணி நேரங்களுக்கு இன்ஸ்டாகிராம் செயல் இழந்ததால் பல பேரின் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊடங்கங்களில் மக்கள் பலரும் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும், சிலர் தங்களால் இன்ஸ்டாகிராமை இயக்க முடியவில்லை எனவும் தெரிவித்தனர். இச்சிக்கலை இன்ஸ்டாகிராம் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் அந்த சிக்கலை சரி செய்து வருவதாகவும் கூறியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் அதன் டுவிட்டில் “சிலருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் உள்ளதை நாங்கள் அறிவோம். இதனால் நாங்கள் அதனை ஆராய்ந்து வருகிறோம். ஆகவே சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.

பல்வேறு இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு உங்களது கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பயனர்கள் கவலைப்பட தேவையில்லை என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரது கணக்குகளிலும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையானது குறைந்து உள்ளதாகவும் சில புகார்கள் எழுந்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை வைத்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 மில்லியன் பின்தொடர்பவர்களை இழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு பழையபடி இன்ஸ்டாகிராம் செயலுக்கு வந்து விட்டது.

Categories

Tech |