Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்வி”…. படார் படார் என பதில் அளித்த மகேஷ்பாபு….!!!!!

ரசிகர்களின் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்துள்ளார் மகேஷ்பாபு.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சரிலெரு நீகேவ்வாரு. இத்திரைப்படம்  வசூல் சாதனை செய்தது. இந்நிலையில் இவர் பரசுராம் இயக்கத்தில் சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மகேஷ்பாபு இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்பொழுது சர்க்காரு வாரி பட்டா திரைப்படத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்ன என கேட்கப்பட்டது. அப்போது அவர் இந்த படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் அதை உருவாக்கிய விதம் தான் மறக்க முடியாத நிகழ்வு என கூறியுள்ளார். இதையடுத்து உங்கள் மகள் எப்பொழுது நடிக்க வருவார் என கேள்வி கேட்கப்பட்ட பொழுது அவர் ஏற்கனவே நடிகை தான் என கூறியுள்ளார். மேலும் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த குணம் என்ன என கேட்கப்பட்ட பொழுது அவரின் அனைத்து குணங்களும் பிடிக்கும் அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். மேலும் உங்களின் நெருங்கிய நண்பர் யார் என கேட்ட பொழுது என் மனைவியே என பதில் கூறி உள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |