நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.
சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் தொடங்கி அதில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் குவிந்து வருவார்கள். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா மிகக் குறைந்த நாட்களில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் தென்னிந்திய நடிகர்களில் குறைந்த நாட்களில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை விஜய் தேவர்கொண்டா பெற்றிருக்கிறார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார்.