Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ட் ஆன லவ்… “காதலனுக்காக கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி”… பெரும் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 22 ஆம் தேதி வீட்டில் கழிப்பறையில் குழந்தை சத்தம் கேட்டது எடுத்து அந்த சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சென்று பார்த்தபோது சிறுமி மயக்க நிலையில் குழந்தையுடன் இருந்துள்ளார். அதன் பின் சிறுமியையும் குழந்தையும் மதுரை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர் இதனை தொடர்ந்து பெற்றோர் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போலீஸர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்டாகிராமில் பழகிய குறிப்பிட்ட வாலிபர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இது பற்றி தகவலின்படி குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் புகாரின் பேரில் சமயநல்லூர் மகளிர் போலீஸர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |