மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராமில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவர் உடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்தபோது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதனிடையே அந்த சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டின் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு பிரசவ வலியை பொறுத்துக் கொண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு சிறுமி மயங்கிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரணைத்தனர்.அப்போது வெற்றி மணி என்பவர் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் அதனால் தான் கர்ப்பம் ஆகியதாகவும் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.