Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் வாலிபர் கைது…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியில் இருக்கும் ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்ததும் மாணவியின் பெற்றோர் ஆவடியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்களது மகளை தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாணவி காணாமல் போய்விட்டார். இதனால் மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ் மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்துள்ளனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |