Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழக்கம்…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காதலிப்பதாக கூறிய ஜார்ஜ் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதனை வெளியே சொல்லி விடுவேன் என மிரட்டி ஜார்ஜ் அடிக்கடி சிறுமியிடம் பணம் வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் ஜார்ஜை கைது செய்தனர்.

Categories

Tech |