Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… ஆசை வார்த்தை பேசி உல்லாசம்…. வசமாக மாட்டிக்கொண்ட சென்னை மாணவி…!!!

சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோயில் கணேசபுரம் சாலையில் 27 வயதுடைய காசு என்பவர் வசித்து வருகிறார். அவர் பெண்களுடன் நெருக்கமாக பழகி ஆபாச புகைப்படம் எடுத்து, அதனை வைத்து பெண்களிடம் பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதனால் காசி மீது 5 பாலியல் வழக்குகள்மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்குகள் பற்றி சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர், காசி தன்னை காதலிப்பது போன்று நடித்து விட்டு என்னை ஏமாற்றி பணம் பறித்து சென்று விட்டார் என்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் அவர் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சென்னை மாணவியுடன் காசிக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது? அதனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார்? என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு வெளியான தகவலில், சென்னையை சேர்ந்த அந்த மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக காசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். அது நாளடைவில் காதலாக மாறியதால், காசி அந்த மாணவியை சந்திப்பதற்கு சென்னை சென்றுள்ளார். அதனைப் போலவே அந்த மாணவி சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். கன்னியாகுமரி வந்தடைந்த மாணவியை காட்சி ஒரு காரில் ஏற்றி பல் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பிறகு நான்கு வழி சாலையில் காரை நிறுத்திவிட்டு மாணவியிடம் ஆபாச வார்த்தைகளைக் கூறி காரில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை தனது கை கடிகாரம் மற்றும் செல்போன் மூலமாக மாணவிக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி பணம் பறிப்பு செய்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Categories

Tech |