Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா?… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அதன்படி இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரிலீஸ் என்ற மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதில் வீடியோக்களை பதிவிடும் வசதி உள்ளது. டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால் அதில் பதிவிட்டு சேவ் செய்து வைத்துள்ள வீடியோக்களை பயனர்கள் ரிலீஸ் செயலியில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டிக் டாக் லோகோவுடன் உள்ள வீடியோக்களை இனி ரிலீஸ் செயலியில் பதிவிட முடியாது என்ற அறிவிப்பை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிவிக்க உள்ளது.

Categories

Tech |