Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி….. 1 1/2 லட்ச ரூபாயை இழந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

நூதன முறையில் 1 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் ஷோபனாஎன்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தில் பகுதி நேர வேலை என குறிப்பிட்டு வாட்ஸ் அப் எண் இருந்தது. அந்த எண்ணை ஷோபனா தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி ஷோபனா கூகுள் பே மூலம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 850 ரூபாயை அந்த நபர் அனுப்பிய லிங்கில் இருந்த ரீசார்ஜ் ஆப்ஷன் மூலமாக அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து அந்த நபர் கூடுதலாக பணம் கட்டுமாறு தெரிவித்துள்ளார். அதில் நம்பிக்கை இல்லாத ஷோபனா தான் கட்டிய பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பதில் அளிக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஷோபனா விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |