Categories
விளையாட்டு

இன்ஸ்டாகிராம்: CSK வீரர் ஜடேஜா செய்த காரியம்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

IPL கிரிக்கெட்டில் டோனி தலைமையிலான சென்னை அணியானது 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 5வது சீசனில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் நீடித்து வந்தது. 15வது சீசன் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன் சிஎஸ்கே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட ஜடேஜா முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார்.

மேலும் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் படுமோசமாக சொதப்பி பார்ம் அவுட்டிற்கு சென்றார். இந்த நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடன், அவர் தொடரில் இருந்தே வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. கேப்டன் பொறுப்பை மாற்றியதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியது. இச்சூழ்நிலையில் அதை உறுதி செய்யும்படியான விஷயங்களை ஜடேஜா செய்து இருக்கிறார். அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்ற 2021 மற்றும் 2022 ஆம் வருடம் ஐபிஎல் பதிவுகளை திடீரென்று முற்றிலுமாக நீக்கியுள்ளார்.

சிஎஸ்கே தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் நீக்கி விட்டார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் டோனிக்கும் – ரவீந்திர ஜடேஜாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். வருடந்தோறும் டோனியின் பிறந்தநாளுக்கு ஜடேஜா மறக்காமல் வாழ்த்து கூறுவார். ஆனால் இந்த ஆண்டு அனைத்து வீரர்களும் வாழ்த்து கூறியபோதும், ஜடேஜா எதுவுமே கண்டுக் கொள்ளவில்லை. சிஎஸ்கே அணியுடனான நெருக்கம் குறைந்து வருவதால் 2023-ம் வருடம் IPL தொடரில் CSKஅணிக்காக ஜடேஜா விளையாடுவது சந்தேகம்தான் எனத் தெரியவந்து உள்ளது.

Categories

Tech |