Categories
தேசிய செய்திகள்

“இன்ஸ்டார்மார்ட் செயலி” பச்சை மிளகாய் மீது ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள்….. எதற்காக தெரியுமா….?

இந்தியாவில் உள்ள உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பிரபலமான நிறுவனமாக ஸ்விக்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் மற்றொரு பிரிவாக இன்ஸ்டாமார்ட் செயலி செயல்படுகிறது. இந்த இன்ஸ்டாமார்ட் மூலம் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‌ இந்த செயலியில் கடந்த ஒரு வருடத்தில் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பாக ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை தான் பெரும்பாலான மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 290 டன் பச்சை மிளகாயை பொதுமக்கள் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் என 62 ஆயிரம் டன் ஆர்டர் செய்துள்ளதாகவும், இது 58 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து டில்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் முட்டை, பால் போன்ற உடனடியாக சாப்பிடக்கூடிய பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியுள்ளனர். மேலும் உணவுப் பொருள்களுக்கு அடுத்தபடியாக கழிவறை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கோடை காலத்தில் ஐஸ் கிரீம் போன்றவைகள் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |