தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆவார். இவர்கள் இருவரும் கடந்து 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சட்டவிரத காவலில் வைத்து தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இரட்டை கொலை வழக்கு மதுரை மாவட்டம் முதலாவது கூடுதல் செசன்சு கோட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. \
இந்த வழக்கில் கைதான போலீசார் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடியாகியது. இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தால். இந்த மனுவில், சுமார் 2 வருடங்களாக நீதிமன்ற காவலில் சீறையில் அடைக்கப்பட்டு உள்ளோம். வழக்கு விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனக்கு ஜாமின் அளிக்கும்பட்சத்தில் கோர்ட் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட கீழ்கோர்ட்டில் மனுதாரர் மனு தாக்கல் செய்து, உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம் என்று கூறி, இந்த மனதை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.