Categories
மாநில செய்திகள்

இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை… ரோட்டுக்கு போங்க… போலீசாருக்கு கமிஷ்னர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காலை, மாலை வேளைகளில் பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் இருக்கும் வகையிலும், அனைத்து வகை போலீசாரையும் சாலைகளில் பணியில் ஈடுபட கமிஷனர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் காலை, மாலை வேளைகளில் சட்டம் ஒழுங்கு போலீசார் அனைவரும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது, ‘பீக் ஹவர்’எனப்படும் கூட்ட நெரிசல் வேலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி மிகவும் கடினமானது. தற்போது நகரின் பிரதான சாலைகளில் பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து சீரமைப்பது சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது. அதனால் போக்குவரத்து போலீஸாருடன் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்து வாகன போக்குவரத்தை சரி செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள்  வரை அனைவரும் கூட்டநெரிசல் வேளைகளில் கட்டாயம் சாலையில் தான் இருக்க வேண்டும், எனவும் வாகன போக்குவரத்து சீராக சென்று வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். ‘விசிபிள் போலீசிங்’ என்ற இந்த நடைமுறைப்படி போலீசார் அதிக எண்ணிக்கையில் சாலையில் பணியில் ஈடுபட்டிருக்கும்போது குற்றங்கள் குறையும். இதனால் கமிஷனரின்  இந்தத் திட்டம் நிச்சயம் பொதுமக்களிடையே வரவேற்பை பெறும்.

Categories

Tech |