Categories
அரசியல்

இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்…!! வசமாக சிக்கியுள்ள இபிஎஸ் குடும்பம்…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் மட்டும் 5 திறன் கொண்ட மோட்டார்களை கூடுதலாக 15 குதிரை திறன் கொண்ட மோட்டார்களாக மாற்ற திருச்சி மாவட்ட தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல் அதற்கு பதிலாக தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை இணைத்து இவ்வாறு அதிகார துஷ்பிரயோக செயலில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |