Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ்-ஐ முதல்வர் ஆக்கியதே பாஜகதான்…. இது புது குண்டு….!!!!

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவுக்கு, பாஜக அரசு பல்வேறு சூழ்நிலைகளில் நட்புடன் ஆதரவு அளித்தது மட்டுமில்லாமல், இபிஎஸ்-ஐ முதல்வர் ஆக்கியதும் பாஜக அரசு தான். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

பொதுவாக அதிமுகவில் ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்கு பின்னரும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது வழக்கம் தான். ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் இந்த மாதிரி சிறு சிறு பிரச்சனைகள், சலசலப்புகள் தோன்றும். பின்னர் சரியாகிவிடும். அதுமாதிரிதான் இது” என்று தெரிவித்தார்.

Categories

Tech |