Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ், ஓபிஎஸ் நடுவில் ஒரு சேர்…. “அண்ணன்” என்று சொன்ன இபிஎஸ்…. பெரும் எதிர்பார்ப்பில் பொதுக்குழு….!!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த கூட்டத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் முன்மொழிந்ததை நானும் வழிமொழிகிறேன் என்று கூறி தனது இருக்கையில் அமர்ந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் இபிஎஸ் நடுவே உள்ள சேரில் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் அமர்ந்துள்ளார்.

Categories

Tech |