Categories
அரசியல்

“இபிஎஸ் க்கு செக் வைக்கும் விதமாக சசிகலாவுக்கு கிரீன் சிக்னல்”…. பீதியில் எடப்பாடி ஆதரவாளர்கள்….!!!!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே சுமார் 55 வருடங்களாக நிலவி வந்த பனிப்போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார் என்ற ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எடப்பாடிபழனிசாமி ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஓபிஎஸ் கட்சியில் தனது இருப்பை காட்டுவதோடு தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் எடப்பாடி பழனிசாமிக்கு நிரந்தரமாக செக் வைக்கும்  விதமாகவும் மறைமுகமாக சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளார்.

இதை விரும்பாத எடப்பாடி மீண்டும் சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் ஓ பன்னீர்செல்வம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயம் பற்றிப் பேசப்பட்டாலும் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்கின்ற தொண்டர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமையாக எடப்பாடிபழனிசாமி பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் முன்மொழிந்தாலும்  அதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதிமுகவில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடனும்,  எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடனும்  ஆலோசனை அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி திட்டமிட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போட்டி போட்டு போஸ்டர்களை ஒட்டி தங்களது செல்வாக்கை காட்டி வருகின்றார்கள். அந்த வகையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் மற்றும் முக்கிய வீதிகளில் விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

அந்த போஸ்டரில் கூறப்பட்டிருப்பதாவது மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலரே அதிமுகவை ஒற்றை தலைமை ஏற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள் என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஆதரவாளர்களின் முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கும் சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்களால் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் பீதியில் இருக்கின்றனர்.

Categories

Tech |