அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது.
பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க, என்று தினந்தோறும் கூறி ஆட்சி நடத்திய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்க கூடிய நீங்களும், உங்கள் சகாக்களும், அண்ணா என்ன சொன்னார்? அண்ணா என்ன பேசினார்? அண்ணா என்ன எழுதினார்? அண்ணா என்ன கடைப்பிடித்தார்? என்பதை தெரிந்து கொண்டு அதற்குப் பின் கருத்துக்களை தெரிவியுங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் பொதுச் செயலாளர், என்றெல்லாம் பதவியை வைத்துக்கொண்டு, சுயநலமாக செயல்பட்டு கொண்டிருக்காதீர்கள். வெட்கப்பட்டு தலை குனியக் கூடிய ஒரு நிலைமையை, திராவிடம் என்ற பெயருக்கும், அறிஞர் அண்ணா என்ற பெயருக்கும் உருவாக்கி இருக்கிறீர்கள். இத்துடன் அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். இதை நீங்களும் உங்களுடைய 33 முன்னாள் அமைச்சர்களும் படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
படிப்பதற்கு முடியாவிட்டால் யாரையாவது படிக்கச் சொல்லி அதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். திரு. சுப. வீரபாண்டியன், திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி அண்ணாமலை அக்கா போன்றோரை அழைத்து அனைத்திந்திய முன்னேற்ற திராவிட கழகத்தின் செயற்குழுவிலோ அல்லது பொது குழுவிலோ தயவுசெய்து அவர்களிடம் திராவிடம் என்றால் என்ன? அறிஞர் அண்ணா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார்? என்றெல்லாம் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பேசுங்கள்.
அடிமையாக இருப்பதையும், திரு.கே அண்ணாமலையின் அடிமையாக இருப்பதையும் விட்டுவிட்டு நல்ல அரசியலை கையில் எடுங்கள். அப்படி என்றால் அண்ணா கூறியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதானால், தயவுசெய்து கட்சிப் பெயரை அடிமைகள் முன்னேற்ற கழகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அங்கே இருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்ற கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி @EPSTamilNadu அவர்களுக்கு,
வணக்கம்.
நலம் ,நாடுவதும் அதவே.உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள்களிலும் படித்தேன்.
பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. pic.twitter.com/dCptB5y121
— Karthikeya Sivasenapathy (@ksivasenapathy) September 18, 2022