அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு ஆன பிறகு ஜெயலலிதா நினைவிடம் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், எம்ஜிஆர் ஐ புரட்சித்தலைவராகவும், ஜெயலலிதாவை புரட்சி தலைவியாகவும் அழைத்தபோல் எடப்பாடி பழனிச்சாமியை எழுச்சி தலைவர் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அதிமுக பொது குழுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆர்பி உதயகுமார் பேசுகையில், இபிஎஸ்ஐ இதய தெய்வம் என அழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.