Categories
அரசியல் கரூர்

இப்டிலாமா ஓட்டு கேப்பீங்க?…. “1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10 ஆயிரம் எலிகள்”…. ஷாக்கான வாக்காளர்கள்….!!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. மேலும் வேட்பாளர்களும் தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கரூர் மாநகராட்சி தேர்தலில் 26-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜேஷ் கண்ணன் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதாவது இன்று எலி பெட்டியில் எலியுடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் 1 கோடி கொசுக்கள், 1 லட்சம் கரப்பான் பூச்சிகள், 10,000 எலிகள், 100 தெரு நாய்களை ஒழித்து சுகாதாரத்தை மேம்படுத்துவேன் என்று துண்டு பிரசுரம் வினியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Categories

Tech |