பிரபல நடிகர்களின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் தொழிலதிபர்கள் முதல் சிறு குறு விற்பனையாளர்கள் வரை சிறிதளவேனும் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக சொத்து மதிப்பு இருக்குமாயின் வருமான வரி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தளபதி விஜய்க்கு சமீபத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது இந்த ஐ.டி ரெய்டு பெரும் தலைவலியாக இருந்துள்ளது. அதேபோல் தல அஜித்தின் திருவான்மியூரில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சுமார் 10 மணி நேரம் ரெய்டு நடத்தினர்.
ஆனால் எதுவுமே சிக்காத காரணத்தினால் வெளியேறி விட்டனர். அதோடு மட்டுமில்லாமல் சுமார் 800 கோடிகளுக்கு சொத்து வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரைய்டு நடத்தினர். அதில் வரி பாக்கி சுமார் 6.4 லட்சங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் யஷ், கிச்சா சுதீப், ரஷ்மிகா மந்தனா, உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் வருமான வரி சோதனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.