மின்சாரத்தை கட்டுபடுத்த திருமண நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல், சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க உலக வங்கியிடம் கடனுதவி அளிக்கும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், நிதி நெருக்கடி, இதர காரணங்களால் நாட்டின் பல்வேறு இடங்களில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
மேலும் பல மணி நேர மின்வெட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மின்சாரத்தை மிச்சப்படுத்த பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த வகையில் நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் நேர கட்டுப்பாடு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள சந்தைகள் இனி இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாத் என்ற நகரில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.