விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தடியமங்கலம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கிஸ்டோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ராபர்ட் லியோ, உதவி திட்ட அலுவலர் குபேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் சுந்தரமூர்த்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் விமலாதேவி, மகேஸ்வரி மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அதிகாரிகள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பலன், இயற்கை விவசாய முறையில் கடைப்பிடிக்க வேண்டிய முறை ஆகியவை குறித்து பயிற்சி அளித்துள்ளனர். இதனையடுத்து கிஸ்டோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ராபர்ட் லியோ, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பற்றிய சான்றிதழ்களை அளித்துள்ளார்.