வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல ராஜகுலராமன் கிராமத்தில் வைத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சிக் அளிக்கப்பட்டுள்ளது . இந்த பயிற்சி புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமி, தோட்டக்கலை காப்பீடு துறை அலுவலர் பரசுராமன், உதவி தோட்டக்கலை அலுவலர் பாலமுருகன், ஜெய்சங்கர், கார்த்திகேயன், கலசலிங்கம், பல்கலைக்கழக இறுதியாண்டு தோட்டக்கலை பிரிவில் பயிலும் மாணவிகள் கயல்விழி, முத்து தமிழ்ச்செல்வி, ஹரிணி, அவிநாசி, கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்களுக்கு வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.