கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. அசோக்குமார், தாசில்தார் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருவிழாவிற்கு பத்திரிக்கை அச்சிட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர் வரும் பாதைகளின் உரிமையாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .