பேருந்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கழிக்கலாம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லுரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லுரி முடித்து விட்டு அசோக்குமார் கழிக்கலாம்பட்டிக்கு செல்லும் பேருந்தின் படிகட்டில் நின்று வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அசோக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.