Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் வரி செலுத்த வேண்டும்…. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

வருமான வரித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தில் வைத்து  வரித்துறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வருமானவரித்துறை உதவியாளர் சதீஷ் பாபு, தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், மதுரை வருமான வரி அலுவலர் சூரியநாராயணன், பட்டய கணக்காளர் சங்கத்தலைவர் வெங்கடாச்சலம், வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் சதீஷ் பாபு அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வருமான வரி செலுத்துபவர்களின் கணக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதிக்குள் முன் பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்துபவர்களுக்கு வட்டியுடன் சேர்த்துக் கொள்ளப்படும். இதனால் வரி செலுத்துபவர்கள் அபராத தொகையை தவிர்க்கமுடியும். மேலும் வரி செலுத்துபவர்கள்  4 தவணைகளாக வருமான வரியை செலுத்தலாம், வரியின் தொகைக்கு கூடுதலாக அட்வான்ஸ் வரி கட்டியவர்களுக்கு கணக்கு தாக்கல் முடிந்தவுடன் மீதமாக வரும் ரீபண்டு தொகைக்கு ஒரு சதவீதம் வட்டியும் சேர்த்து வழங்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |