சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், வேணுகோபால், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், மருத்துவர் மத்தியாஸ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து சீட் பெல்ட் அணிய வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.