மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்.டி ஆகிய பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களும், முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் தற்போது நடைபெறும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் தேர்வு எழுத விரும்புபவர்கள் பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி கட்டண விவரங்கள், தகுதி தேர்வு தேதி ஆகிய விவரங்களை nttp://WWW.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் NET/ SET/ JRF/ GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதி தேர்வு கிடையாது. எனவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.