Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் விற்பனை செய்ய வேண்டும்….. அதிரடிஆய்வு செய்த அதிகாரிகள் ….!!

மீன் கடைகளை  மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன் கடைகளை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தியாகராஜ், உதவியாளர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் டாக்டர் பிரபாவதி கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? ரசாயனம் தடவி பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார். மேலும்  பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்  மீன்களை  கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |