Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படித்தான் எங்க திருமணம் நடக்கப் போகுது”….. விக்கி-நயன் வெட்டிங் குறித்த புதிய அப்டேட்….!!!!

இந்து முறைப்படி எங்களது திருமணம் நடைபெற உள்ளது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் உணர்ச்சிவசப்பட்ட விக்னேஷ் சிவன் கண்கலங்கினார். இதன் பிறகு பேசிய அவர் “நயன்தாராவை நான் வரும் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளேன் . எப்போதும் போல உங்களுடைய அன்பு எங்களுக்கு தேவை. திருமணத்திற்கு பிறகு நானும் நயனும் உங்களை சந்திக்கிறோம்.

முதலில் திருமணம் திருப்பதியில் நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் பயண தூரம் காரணமாக மகாபலிபுரத்தில் மாற்றிவிட்டோம். எங்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற உள்ளது” என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜூன் 9ஆம் தேதி நண்பர்கள், உறவினர்கள் என குறுகிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |