Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வாக்கு எண்ணப்படும்…. தீவிர கண்காணிப்பு ….மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்கு எண்ணும் மையத்தை  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் முருகேசன்  மையங்களில் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி கலெக்டர் வெற்றிவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வந்தவாசி, செய்யாறு, செங்கம், போரூர், ஆகிய பகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 51 மேஜைகள் அமைத்து 157 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் முதலில் தபால் வாக்கு சீட்டுகள் என்ன பட்ட பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் வார்டு வாரியாக எனப்படும். மேலும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மற்றும் தேர்தல் முகவர் ஆகியோர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தீவிர  கண்காணிப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

Categories

Tech |