கொரோனா தொற்றின் இரண்டாவது ஆலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா? என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா? என்ற கேள்வி கேட்டு மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.