மாட்டுவண்டியில் அதிக சுமை ஏற்றப்பட்டு மாடு கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பொருள்கள், சரக்குகள் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டி தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மூலப்பட்டறை பார்க்ரோட்டில் உள்ள பார்சல் அலுவலகத்தில் பொருள்களை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாட்டு வண்டியில் சுமை அதிகமாக ஏற்றப்பட்டதால் மாடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது.அதை தொடர்ந்து வண்டியிலிருந்து பாரம் இறக்கிய பின்பும் வெகுநேரமாகியும் மாடு எழும்பவில்லை. பின் வண்டிக்காரர் மாட்டை எழுப்பி வண்டியில் இணைத்து பொருட்களை ஏற்றி சென்றுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.