Categories
உலக செய்திகள்

இப்படியா செய்வது…? சோம்பேறி காதலனின் மோசமான செயல்…. நெட்டிசன்கள் கலாய்ப்பு…!!!

காதலி தங்கையின் அறையில் சிறுநீரை சேகரித்து வைத்த காதலருக்கு கழிப்பறையை பயன்படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் ஒரு கல்லூரியில் படித்த கொலீன் தன் படிப்பிற்காக கல்லூரி சென்றதால் தன் அறையை அக்காவிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். படிப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய தங்கை தன் அறையை பார்த்த போது அது குப்பையும் கூளமுமாக கிடந்ததால் அதை, சரி செய்துவிட்டு பயன்படுத்தலாம் என்று எண்ணி சுத்தம் செய்யும்போது கட்டிலின் அடியில் நிறைய பாட்டில்கள் இருப்பதைக் கண்ட அவர் என்னவென்று பார்த்தபோது அதில் சிறுநீர் கழித்து வைத்திருந்தது தெரிய வந்தது.

கொலீன் கல்லூரிக்கு சென்ற பின்னர் அக்காவும் அவளது காதலனும் அந்த அறையில் தங்கியிருக்கிறார்கள். சோம்பேறியான அக்காவின் காதலன் சிறுநீரை கழித்து பாட்டில்களில் அடைத்து வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த கொலீன் அறையை சுத்தம் செய்யும் விடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த சோம்பேறி காதலரை மாற்றுங்கள், கழிப்பறையை பயன்படுத்த சொல்லிக் கொடுங்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.

Categories

Tech |