போலி துறவியின் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அறைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் லேடி ரீடிங் என்னும் மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையின் கர்ப்பிணி பெண் ஒருவர் தலையில் ஆணி அடிக்கப்பட்டு நிலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது இதனை தொடர்ந்து பெஷாவர் காவல் துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் ஆக்ஸன் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது. ஆண் குழந்தை வேண்டுமென்றால் தலையில் ஆணி அடித்து கொள் என போலி துறவியின் பேச்சை நம்பி இந்த அப்பாவி பெண் தனது தலையில்ஆணி அடித்துள்ளார் .
மேலும் இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் இருப்பதாகவும், நான்காவதாக பெண் குழந்தை இருந்தால் கை விட்டு விடுவேன் என அவர் கணவர் கூறியதால், போலி சாமியாரின் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அடித்துள்ளார் . ஆனால் இந்தப் பெண்ணால் வலி தாங்க முடியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அவரது தலையில் இருந்த ஆணியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. போலித் துறவிகள் 2 அங்குல ஆணி பெண்ணின் நெற்றியின்மேல் பிடித்திருந்தது ஆனால் அது மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது என மருத்துவர்கள் கூறினர்