நாயை அடித்து கொன்று விட்டு ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளுபட்டி கிராமத்தில் விவசாயியான சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகிறார். இதற்கு பாதுகாப்பாக நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவரின் தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆட்டை திருட முயன்றுள்ளனர். அப்போது நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் நாயை அடித்து கொன்று விட்டு தோட்டத்தில் இருந்த 4 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை சத்யராஜ் தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது நாய் இறந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் ஆடுகள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.