Categories
உலக செய்திகள்

இப்படியா பண்ணுவீங்க…? வீட்டு வேலைக்கு சென்ற பெண்…. உரிமையாளர் செய்த கொடூரம்…. வலைத்தளத்தில் குவியும் கண்டனங்கள்…!!

வேலைக்கு சென்ற பெண்ணின் முகத்தில் வீட்டின் உரிமையாளர் சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் குடும்ப வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்காக மட்டக்களப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள  ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த போது அந்த வீட்டின் பெண் உரிமையாளர் ஒருவர் சுடு தண்ணீரை எடுத்து தங்கமணியின் முகத்தில் வீசியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் துடிதுடித்த தங்கமணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் மனிதாபிமானம் இல்லாமல் பெண் ஒருவர் செய்த இச்செயலுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
.

Categories

Tech |