Categories
தேசிய செய்திகள்

இப்படியா பரிசு கொடுப்பது..? மணமகனின் நண்பர்கள் கொடுத்த கிப்ட்… தூக்கி எறிந்த மணப்பெண்… அப்படி அதுல என்ன இருந்தது…?

மணமகனின் நண்பர்கள் திருமண பெண்ணிற்கு கொடுத்த பரிசால் அவர் கோபப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் அதுவும் வட மாநிலங்களில் திருமணத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வைரலாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. திருமண நிகழ்வின் போது மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிற்கு கொடுத்த கிப்ட் அவரை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் அவர் அந்த கிப்டை தூக்கி எறிந்தார். பெரும்பாலும் நண்பனின் திருமணத்திற்கு வரும் நண்பர்கள் சீரியசாக எதையும் வழங்காமல் காமெடியாக எதையாவது வழங்குவது வழக்கம். சில நேரங்களில் மணமகனையே ஆத்திரமடைய செய்யும்.

ஆனால் இங்கு மணப்பெண்ணின் கோபத்தை கிளப்பிய மணமகனின் நண்பர்கள் அந்தந்த அந்த கிஃப்ட் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் மணமேடையில் அமர்ந்திருக்கும் போது மணமகனின் நண்பர்கள் அங்கு வந்து அவருக்கு ஒரு பரிசை கொடுத்தனர். அதை அப்போதே திறந்து பார்க்க சொல்ல, மணமகளும அதை திறந்த பார்க்கிறார். அதில் குழந்தைக்கு பாலூட்டும் பீடிங் பாட்டில் இருப்பதைக் கண்டதும் அந்த பரிசை அவர் தூக்கி வீசுகிறார். இதனை வீடியோவாக எடுத்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வரும் இந்த வீடியோவை தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

Categories

Tech |