Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படியா பேசுவீங்க…! தலைவருக்கு தெரில… ரவுடின்னு சொல்லலாமா ? வேதனைப்பட்ட முதல்வர் …!!

திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டிற்கு உணவளிக்கின்றவர்கள் விவசாயிகள். விவசாயிகள் வெயிலில் – மழையிலும், இரவு என்றும்,  பகல் என்றும் பாராமல் நாட்டுக்காக உழைத்து ,உணவு உற்பத்தியை பெருக்கி, இன்றைக்கு தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுகின்ற அளவிற்கு விளைச்சலை கொடுக்கின்றவர்கள் வேளாண் பெரு மக்கள். உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என  திருவள்ளூர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு விவசாயிகளுக்கு இன்னல் வருகின்ற பொழுது எல்லாம்….  எப்படி நம்ம இடுப்பில் கட்டியிருந்த வேஷ்டி அவிழும் பொழுது நம் கை சென்று சரி செய்கின்றதோ அதுபோல்…. விவசாயி  இன்னலில் இருக்கின்ற போது எங்களுடைய அரசு தானாக வந்து சரி செய்து விடுகிறது. நானும் ஒரு விவசாயி, இன்றைக்கும் நான் வேளாண் பணி மேற்கொண்டிருக்கிறேன்.

விவசாயிகள் என்பது ஒரு பொதுவானவர்கள். பல்வேறு கட்சியை  சார்ந்த விவசாயிகள் அனைவரும் இங்கே வந்து இருப்பீர்கள் என கருதுகின்றேன். எனவே நான் அரசியல் சார்ந்து பேசவில்லை. உண்மை நிலையை எடுத்து சொல்வது என்னுடைய கடைமை. நான் விவசாயி , விவசாயி என்று சொன்னால் ஸ்டாலின் கோவப்படுகிறார். பல்வேறு கூட்டங்களில் அவர் பேசுகின்ற பொழுது ரவுடி தான் தன்னை ரவுடி ரவுடி என்று அறிமுக படுத்திக்கொள்வார்கள்.

அதே போல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த கூட்டத்திற்கு சென்றாலும், நான் விவசாயி , விவசாயி என்று தன்னை கூறிக்கொள்கிறேன் என்று குறிப்பிடுகின்றார். ரவுடியும், விவசாயும் ஒண்ணா சொல்லுங்க. ரவுடி வேற ,விவசாயி வேற. அப்படி ஒரு கீழ்த்தணமாக எண்ணம்.

எதை பேசணும்னு கூட தெரியாத தலைவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைவர் ஸ்டாலின். விவசாயி எந்த அளவிற்கு உயர்ந்தவர், பண்பாளர்கள், உழைப்பாளிகள், தன்னலமற்று சேவை செய்கிறவர்கள்.  அந்த விவசாயிகளை  ரவுடியோடு ஒப்பிட்டு பேசுவது எந்த வகையில் சரி என்பதை அவர் எண்ணிப்பார்க்க வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |