டிக் டாக்கில் 22 வயதான இளம் பெண் ஒருவர் தான் வீடு இல்லாமல் வாரத்திற்கு 40 மணிநேரம் காரில் பயணம் செய்து அதிலேயே தங்கி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் டிக் டாக் செயலி தடைவிதிக்கப்பட்ட போதிலும் பல நாடுகள் இன்னும் அது லைவில் தான் உள்ளது. இந்நிலையில் இந்த டிக்டாக்கில் 22 வயதுடைய ஆலியா என்ற இளம்பெண் ஒருவர் தான் வாரத்தில் 40 மணி நேரம் காரிலேயே பயணம் செய்து வீடு இல்லாத காரணத்தினால் அதிலேயே வாழ்ந்து வருகிறேன் என்று தனது கஷ்டத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் தான் வேலை பார்க்கும் இடத்திலேயே பல்துலக்கி, குளிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வீடில்லாத காரணத்தினால் தான் மிகவும் களைப்பாக உணர்கிறேன் என்றும் அவர் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை சுமார் 5.1 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்.